''அன்புள்ளம் கொண்டோரே... வணக்கம் எங்களை போன்றே எங்கள் மகன் விஜய்யையும் உங்கள் கைகளில் ஒப்படைக்கிறோம்' - Thalapathy Vijay

Breaking

Thalapathy Vijay

Special News Website for Thalapathy Vijay

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday 17 July 2021

''அன்புள்ளம் கொண்டோரே... வணக்கம் எங்களை போன்றே எங்கள் மகன் விஜய்யையும் உங்கள் கைகளில் ஒப்படைக்கிறோம்'

 


 உச்சத்தில் இருக்கும் விஜய் அடுத்த படத்திற்கு எந்த இயக்குநரை டிக் அடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு கூடியிருந்தது. பல பெரிய இயக்குநர்களின் பெயர் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இறுதியாக 'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' படங்களின் இயக்குநரான நெல்சன் திலீப்குமார் தேர்வு செய்யப்பட்டார்.

1. நாளைய தீர்ப்பு - 1992

'வெற்றி', 'குடும்பம்', 'வசந்த ராகம்', 'சட்டம் ஒரு விளையாட்டு', 'இது எங்கள் நீதி' எனத் தனது தந்தை இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த விஜய் ஹீரோவாக அறிமுகமான முதல் படம் 'நாளைய தீர்ப்பு'. விஜய்யின் அம்மா ஷோபா தான் நாளைய தீர்ப்பின் கதாசிரியர். இயக்கம் எஸ்.ஏ.சி.
''அன்புள்ளம் கொண்டோரே... வணக்கம் எங்களை போன்றே எங்கள் மகன் விஜய்யையும் உங்கள் கைகளில் ஒப்படைக்கிறோம்'' என டைட்டில் கார்டில் எஸ்.ஏ.சியின் வாய்ஸ் ஓவரோடு ஒரு மாஸ் ஹீரோவுக்கே உரித்தான ஸ்டைலில் விஜய்யை அறிமுகப்படுவார்கள்.

''நடு ரோட்ல நாலு பேர் சேர்ந்து ஒரு அப்பாவிய அடிக்கிறத பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது'' என அநியாயத்தை கண்டு வெகுண்டெழும் ஆங்ரி யங் மேன் கதாப்பாத்திரம் விஜய்யுடையது. விஜய் தனது கல்லூரி நண்பர்களோடு சேர்ந்து 'நாளைய தீர்ப்பு' என்ற பத்திரிகை நடத்தி சமூக அட்டூழியங்களை தட்டிக்கேட்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். பெரிய மாஸ் ஹீரோ செய்யவேண்டிய விஷயங்களை ஒரு புதுமுகம் செய்ததால் மக்களுக்கு சரியாக கனெக்ட் ஆகவில்லை. கில்லி-திருப்பாச்சி நேரத்தில்தான் இந்த ஆங்க்ரி யங் மேன் டைப் கேரக்டர்கள் விஜய்க்கு சரியாக செட் ஆகத் தொடங்கியது.

2. செந்தூரப்பாண்டி - 1993

'நாளைய தீர்ப்பு'க்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்களுக்குப் பிறகு சரியாக ஒரு வருடம் கழித்து 1993-ல் ரிலீசான படம் 'செந்தூரப்பாண்டி'. விஜய்யை பட்டித்தொட்டியெங்கும் கொண்டு சேர்க்கும் முனைப்பில் நெருங்கிய நண்பர் என்ற அடிப்படையில் விஜயகாந்திடம் தேதி வாங்கி விஜயகாந்த் - விஜய் இருவரையும் வைத்து டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாக எடுத்தார் எஸ்.ஏ.சி. இந்த படத்தில் விஜய்க்கு காதல் காட்சிகளே அதிகம். மற்றபடி மாஸ்-ஆக்ஷன் காட்சிகளெல்லாம் விஜயகாந்த்துக்குத்தான். கௌதமி, மனோரமா, விஜயக்குமார் என பிரபலமான நடிகர்கள் பலரும் நடித்திருந்ததால் இந்த படம் மக்கள் மத்தியில் கவனம் பெற்றது. இந்த படத்தில் நடிக்க எஸ்.ஏ.சி யிடம் சம்பளம் வாங்க விஜயகாந்த் மறுத்ததாகவும், படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜயகாந்துக்கு எஸ்.ஏ.சி வற்புறுத்தி சம்பளம் கொடுத்ததாகவும் செய்திகள் உண்டு.

3. ரசிகன் - 1994

'நாளைய தீர்ப்பு' மாதிரியான மாஸ் வொர்க் அவுட் ஆகாது எனப் புரிந்து நரம்பு புடைக்கும் புரட்சிகளையெல்லாம் ஓரம்கட்டி விட்டு விஜய்க்காக எஸ்.ஏ.சி எடுத்த காதல் கதைதான் 'ரசிகன்'. சங்கவியின் கிளாமர் காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இந்த படத்தில்தான் முதல் முறையாக கவுண்டமணி செந்திலுடன் காமெடி காட்சிகளில் நடித்திருந்தார் விஜய். அதேப்போல விஜய் முதல் முதலாக சொந்தக்குரலில் பாடிய 'பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி' பாடலும் பயங்கர பிரபலம். சோலோவாக நடித்து விஜய்க்கு ஒரு நல்ல வெற்றியை கொடுத்த படமாக 'ரசிகன்' அமைந்தது.

4. தேவா - 1995

விஜய்யை ஒரு மார்க்கெட் உள்ள ஹீரோவாக நிலைநிறுத்தப் போராடிக்கொண்டிருந்த சூழலில் மீண்டும் எஸ்.ஏ.சி இயக்கிய படம் 'தேவா'. 'செந்தூரப்பாண்டி' ஸ்டைலிலேயே காதல் -பஞ்சாயத்து-ஆக்ஷன் ஃபார்முலாதான். சிவக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கோலிவுட்டில் ஒரு பெரிய பிரேக் கிடைக்கும் வரை விஜய்க்கு களத்தில் நிலைத்து நிற்க கிடைத்த சின்ன சின்ன வெற்றிகளில் 'தேவா'வும் ஒன்று. இன்னொரு முக்கியமான விஷயம் விஜய்க்கு முதன் முதலாக 'இளைய தளபதி' என பட்டம் சூட்டப்பட்டது 'தேவா'வில்தான்.


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here